• Jul 24 2025

இந்த பூனையும் பால் குடிக்குமான்னு நினைச்சேன், பால்பண்ணையே குடிக்கும் போல- செல்வராகவனை புகழ்ந்து தள்ளிய கூல் சுரேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன்.இவர்களுடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

 இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.


இந்நிலையில் இப்பட விழாவில் பேசிய கூல் சுரேஷ்,  “இந்த பூனையும் பால் குடிக்குமான்னு நினைச்சேன், பால்பண்ணையே குடிக்கும் போல. செல்வராகவனை போல் கதாநாயகனாக தேர்ந்தெடுத்திருக்கிறாரே இயக்குநர் என நினைத்தேன்.


ஆனால் சிவ சிவாய பாடலில் அப்படி நடித்திருந்தார். இவர் எப்படி டான்ஸ் ஆடுவார் என நினைத்தான். ஆனால் இந்த கதைக்கு இந்த மாதிரி ஒரு எமோஷனலாக நடிப்பவரால் மட்டும்தான் நடிக்க முடியும். அவ்ளோ சூப்பராக நடித்திருக்கிறீர்கள் செல்வராகவன் சார்” என சொன்னவர், “எஸ்டிஆர்னா பத்து தல.. பகாசூரன்தான் கெத்து தல” என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement