• Jul 25 2025

நல்ல அம்மாவுக்கு பிறந்தவன் நான்..விஷ்ணுகாந்த் குற்றச்சாட்டால் கடுப்பாகி பதிலளித்த விஜே ரவி!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 சீரியல் நடிகை சம்யுக்தாவும் விஜே ரவி இப்போதும் தொடர்பில் இருப்பதாக விஷ்ணுகாந்த் கூறிய குற்றச்சாட்டை ரவி மறுத்துள்ளார்.

சீரியல் நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து கடந்த மார்ச் திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்த நிலையில் தற்போது பிரிந்துவிட்டனர்.

திருமணமான இரண்டே மாதத்தில் இருவரும் பிரிந்தது குறித்து சம்யுக்தா இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்து பேசியிருந்தார். எனினும் அப்போது, எனக்கு 22 வயசுதான் ஆகுது அவருக்கு 32 வயசு ஆகுது. அப்போதும் என்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என்று அவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அவருக்கு 24 மணிநேரமும் அந்த நினைப்புதான். இதனால், என் அப்பா வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறினார்..



சம்யுக்தா கூறிய குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுத்த விஷ்ணுகாந்த், சம்யுக்தா என்னை காதலிக்கும் முன்பே, ரவி என்பவரை காதலித்து வந்ததாகவும், இவர்கள் இருவரும் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் ஒன்றாக சேர்த்து நடித்தவர்கள் என்றும், திருமணம் ஆனபோதும் இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில், விஷ்ணுகாந்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள விஜே ரவி, என்னை சுற்றி குடும்பத்தினர் பலர் உள்ளார்கள். நான் நல்ல அம்மா, அப்பாவுக்கு பிறந்தவன், நான் சம்யுக்தா கிட்ட தப்பா நடந்து கிட்டேன் என்று சொல்வதை கேட்கும் போது வியப்பாக உள்ளது. என்னுடைய இன்ஸ்டாகிராமில் 475கே பாலேவர்ஸ் இருக்காங்க இந்த இடத்தை பிடிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்.



எனனும் இதுவரை என்னுடன் இணைந்து நடித்த நடிகர்களிடம் நான் ஒரு நல்ல நண்பனாகத்தான் இருந்து இருக்கிறேன். ஒரு விஷ்ணுகாந்த் சொல்வது போல நான் தப்பானவனாக இருந்து இருந்தால், மற்ற நடிகைகளும் என்னை பற்றி புகார் கொடுத்து இருப்பார்களே. விஷ்ணுகாந்தின் புகாருக்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, என்னுடன் பழகியவர்களுக்கு நன்றாக தெரியும் நான் எப்படி என்று என விஜே ரவி விரிவான விளக்கம் கொடுத்துள்ளார்.




Advertisement

Advertisement