• Jul 26 2025

அந்த சமயத்தில் நான் மன உளைச்சலில் இருந்தேன்.. மகன்கள் முன்னிலையில் மேடையில் பேசிய தனுஷ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். அதுமட்டுமல்லாது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் சமீபத்தில் மனைவி ஐஸ்வர்யாவிடமிருந்து விவாகரத்துப் பெற்று தனியாகவே வாழ்ந்து வருகின்றார். 


இந்நிலையில் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்து வருகின்றார். அந்தப் படத்தின் பெயர் தான் 'வாத்தி'. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகி இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது.


அந்த விழாவுக்கு தனுஷ் தன்னுடைய இரு மகன்களையும் அழைத்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய தனுஷ் வாத்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்துக் கூறி இருக்கிறார். அதாவது கொரோனா லாக் டவுன் நேரத்தில் தான் வெங்கி அட்லுரி இந்த கதையை அவரிடம் சென்று சொன்னதாக கூறினார்.


மேலும் "அந்த நேரத்தில் நானே வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்தேன், கதை கேட்டுவிட்டு வேண்டாம் என ஏதாவது காரணம் சொல்லலாம் என்று கூட காத்திருந்தேன். ஆனால் அந்தக் கதை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டதால் உடனே ஒகே சொல்லிவிட்டேன்"  என தனுஷ் அந்நிகழ்வில் ஓபனாக கூறி இருக்கிறார்.

Advertisement

Advertisement