• Jul 24 2025

நான் உண்டு வேலை உண்டுன்னு சிவனேன்னு தானே இருந்தேன்! இது என்ன புது பஞ்சாயத்து! விஜய், லோகேஷ் கனகராஜுடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட விக்கி!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் தளபதி விஜய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்களின் நடிப்பிலும் வெளிவர அக்டோபர் 19 வெளிவர இருக்கும் திரைப்படம் தான் லியோ! இப்படம் ளெிவர முன்னரே பல எதிர்புக்களை சந்திக்வேண்டி இருந்தது. இதனாலையே ரசிகர்கள் லியோ படத்தினை பார்ப்பதற்கு ஆவலுடன் இருக்கின்றார்கள்.


இந்நிலையில் சமூக வலைதளங்களில் இது பற்றிய செய்திகள் அதிகமாக பரப்ப்பட்டு வருகின்றது இந்நிலையில் விக்னே ஷ் சிவன் போட்ட ஒரு லைக் x தளத்தையே அதிர வைத்துள்ளது. அதாவது லியோ படத்தில் விஜய்க்கும் லோகேஷ் கனகராஜ்க்கும் கருத்துவேறு ஏற்பட்டதாகவும், அதனால் குழப்பங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இது சர்ச்சையாக  வெடித்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் அது வதந்தி அதுவரும் போது நானும் விஜய் அண்ணாவும் ஒன்றாக இருந்து தான் அதை படித்தோம் என முற்றுப் புள்ளி வைத்தார்.


குறித்த செய்தியை பதிவிட்ட ரஜினி ரசிகர் ஒருவரின் பதிவுக்கு விக்னேஷ் சிவன் லைக் பண்ணிவிட்டு அது சர்ச்சையாக மாறிய போது லைக்கை நீக்கிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர் விக்கி இப்பிடி செய்துவிட்டாரே என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் விக்கியை உண்மையை அறியாமல் எப்படி லைக் பண்ணலாம் என விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்துள்ளனர்.இதனை பார்த்த விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டிருக்கின்றார்.

அவர் குறிப்பிட்டிருப்பது எனக்கு பிடித்த இயக்குனர் பதிவு என்பதால் என்னவென பார்க்காமலே லைக் செய்துவிட்டேன் அதன்  பின்னர் தான் இந்த பிரச்சினையை அறிந்து கொண்டேன். இதைவைத்து ரசிகர்கள் பிரச்சினை செய்ய வேண்டாம் உங்களைப்போல் நானும்  லியோ ரிலீசுக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement