• Jul 25 2025

''நடிகர் பிரபுதேவாவை வெறித்தனமாக காதலித்தேன்''..மனம் திறந்த வனிதா..! அட இது எப்போ?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்பவர் வனிதா. 

சினிமா,தொலைக்காட்சி தொடர்களில் தலைகாட்டி வந்த வனிதா பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் தனது செயல் மற்றும் பேச்சால் மக்கள் மத்தியில் கவனிக்கப்படுபவராக இருந்தார். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு ஒரு சில ஊடகங்களில் பிரபலங்களை பேட்டி எடுத்துவருகிறார். அதுமட்டுமின்றி ஒரு சில படங்களிலும் நடித்துவருகிறார்.



இந்நிலையில் வனிதா அந்த பேட்டியில், "பிரபுதேவாவை நான் வெறித்தனமாக காதலித்தேன். காதலன் படம் வந்த நேரத்தில் அவருடைய புகைப்படங்களை, அவர் தொடர்பான செய்திகளை அனைத்தையும் சேகரித்து வைத்திருந்தேன் . அதுமட்டுமின்றி என்னை நக்மாவாக நினைத்துக்கொண்டு பிரபுதேவாவுடன் கனவில் டூயட் எல்லாம் பாடியிருக்கிறேன்.

அவர் மீது எனக்கிருந்த அன்பை பார்த்த எனது அப்பா விஜயகுமார் ஒருமுறை பிரபுதேவாவை வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர் வருவதையொட்டி வித விதமாக பல அசைவ உணவுகளை சமைத்து வைத்திருந்தேன். ஆனால் அவரோ நான் அசைவம் சாப்பிடமாட்டேன் சைவம்தான் என சொல்லிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் முட்டையை வைத்து சமைத்து கொடுத்தேன். அவருக்காக சில நாட்கள் நானும் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறவும் செய்திருந்தேன். அதன் பிறகு அசைவம் சாப்பிட தொடங்கிவிட்டேன்" என கூறியிருந்தார்.

Advertisement

Advertisement