• Jul 26 2025

அந்த வீட்டில என்னைக் காட்டவே இல்லை சோறு ஒழுங்கா தரல- பிக்பாஸை கழுவி ஊற்றிய பிரபல நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடன இயக்குநராகவும் நடிகையாகவும் வலம் வருபவர் தான் அபிநய ஸ்ரீ. இவர் தெலுங்கில் இரண்டு வாரங்களுக்கு முதல் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6இல் கலந்து கொண்ட எலிமினேட் ஆகியுள்ளார். இது குறித்து பிரபல சேனலுக்கு பேட்டியளித்த போது கூறிய விடங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அதில் அவர் கூறியதாவது நான் தமிழ் பிக்பாஸைப் பார்த்திட்டு தான் தெலுங்கு பிக்பாஸ் என்று நினைத்து போனேன். ஆனால் அது நான் நினைச்ச மாதிரி இல்லை. வீட்டுக்குள்ள போனதில இருந்து என்னை காட்டவே இல்லை. நான் உட்காந்திட்டு இருக்கிறதை மட்டும் தான் காட்டினாங்க. இப்பிறம் சாப்பாடும் கொஞ்சமாத் தான் வரும். அதை தான் பங்கிட்டு சாப்பிடணும்.


எங்க அம்மா போய் கேட்டாங்களாம் என் பொண்ணு சும்மா இருக்க மாட்டாளே அவளை ஏன் காட்டல என்று கேட்டாங்க ஆனால் சேனல்  அப்பிடி எல்லாம் எதுவும் இல்லை என்று சொல்லி விட்டுடாங்க. தெலுங்கு பிக்பாஸ்ல பாஷால்டி இருக்கு அவங்களுக்கு பிடிச்சவங்களை காப்பாத்தனும் அது தான் அவங்க ஐடியா என்று தெரியுது.


தமிழ் பிக்பாஸ்ல கமல் சேர் வந்தால் எல்லார் கிட்டையும் பேசுவாரு ஆனால் அங்க அப்பிடி இல்லை நாகர்ஜுனா சேர் வந்தால் ஒரு நாளு அஞ்சு பேர் கிட்டை தான் பேசுவாரு. மற்றவங்க சும்மா தான் இருப்பாங்க. தமிழ்ல வாய்ப்புக் கிடைக்காததால் தான் அங்க போனேன். தமிழ்ல கிடைச்சிருந்தா கண்டிப்பா போயிருக்க மாட்டேன். எனுக்கு ஒரு சந்தர்ப்பம் தந்து பாருங்க என்றும் அதில் கூறியிருக்கிறார் 

Advertisement

Advertisement