• Jul 24 2025

உணர்ச்சி வசப்பட்டு அப்போ பேசிட்டேன் இப்போ எல்லாமே சரி ஆகிடுச்சு- பாக்கியலட்சுமி கோபி ரசிகர்களுக்கு கூறிய குட்நியூஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் தொடர்களில் ஒன்றாக உள்ளது.  டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. ரசிகர்களின் மனம்கவர்ந்த இந்தத் தொடர் பல எபிசோட்களை கடந்து ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. இந்தத் தொடரின் கோபி -பாக்கியா மற்றும் ராதிகா கேரக்டர்கள் லீட் கேரக்டர்களாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

கோபியாக சதீஷ், பாக்கியாவாக சுசித்ரா மற்றும் ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களை மையமாக கொண்டு மற்ற கேரக்டர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் கோபியாக நடித்துவருகிறார் நடிகர் சதீஷ். இவர் முன்னதாக சில சீரியல்கள், படங்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி தொடர் இவருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. 


இந்தக் கேரக்டருக்கு இவர்தான் பொருத்தம் என்று கூறும் வகையில் இந்த கேரக்டர் அமைந்துள்ளது. தான் ஆசைப்படும் வாழ்க்கைக்காக திருமணமான பிள்ளைகளுடன் தான் வாழ்ந்துவந்த வாழ்க்கையை உதறித்தள்ளும் கோபி, தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்துக் கொள்கிறார். 

தான் விரும்பிய கனவு வாழ்க்கை தனக்கு கிடைக்கும் என்ற நப்பாசையில் இவர் எடுக்கும் இந்த முடிவு இவருக்கே ஆப்பாக முடிகிறது. ராதிகாவுடன் நித்தம் ஒரு சண்டை என பொழுது கழிகிறது. இதையடுத்து விரக்தியடையும் கோபி, குடி பழக்கத்திற்கு ஆளாவதாக கதைக்களம் நகர்ந்து வருகிறது.இதனிடையே, இந்த தொடரிலிருந்து தான் விலக உள்ளதாகவும் இன்னும் சில வாரங்களே தான் தொடரில் நடிப்பேன் என்று சில வாரங்களுக்கு முன்பு சதீஷ் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் தற்பொழுது ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது நான் 10 நாட்களுக்கு முதல் தனிப்பட்ட காரணங்களால் உணர்ச்சி வசப்பட்டு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவாத அறிவித்திருந்தேன். தற்பொழுது அந்த பிரச்சினை எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. மீண்டும் சீரியலில் நடிக்க சம்மதிக்கின்றேன். நான் மீண்டும் கோபியாக மகிழ்ச்சியாக நடிக்கவுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement