• Jul 23 2025

அந்த நபரால் எனக்கு உடல்ரீதியான துன்புறுத்தல் நடந்துள்ளது...முதன் முதலில் மனம் திறந்த நடிகை சுனைனா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் நகுலுடன் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சுனைனா. அந்த படத்தில் இருவரது கெமிஸ்ட்ரியும் வேற லெவெலுக்கு ஒர்க் அவுட் ஆனதை அடுத்து, மாசிலாமணி படத்தில் மீண்டும் ஒன்றிணைந்தனர். அந்த படமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

அதன் பின்னர் தமிழில் சுனைனாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தெறி படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்தரகனிக்கு ஜோடியாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.


இந்நிலையில் சிறப்பு நேர்காணலில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.அதில் அலர் தெரிவித்ததாவது....

நான் சிறுவயதில் இருந்தே  உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்துள்ளேன். அதாவது நான்  பாடசாலை செல்கின்ற காலத்தில் ஆட்டோவில் தான் செல்வேன் . அப்போது தான் எனக்கு அந்த பிரச்சனை ஏற்பட்டது.அதுவும் அந்த ஆட்டோ ரைவரலால் தான் ஏற்பட்டது.கிட்டத்தட்ட 4 வருடங்களாக அந்த வேதனையை அனுபவித்தேன் .அப்போது நான் ஏழம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு படித்து இருப்பேன்.


அதை யாருக்கும் நான் கூறவில்லை.கொஞ்ச நாளுக்கு முதல் எனும் நண்பியிடம் அதைப் பற்றி பேசி இருந்தேன் .அத்தோடு இதை  என் பெற்றோரிடம்  கூட சொல்லவில்லை .அப்போதே எனக்கு இது தப்பு என்று தெரிந்தது.அத்தோடு அந்த ஆட்டோ ரைவர் எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய நபரும் கூட.

 இவற்றோடு பொதுவாக பாலியல்துஸ்பிரயோகத்தில் பொதுவாக அனைவரினதும் கருத்து பெண்ணின் உடையினால் என்பதனால் ஆகும்.இதனை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் என கேட்டபோது, நிச்சியமாக கிடையாது.பெற்றோர் பிள்ளைகளிடம் சொல்லிவளர்க்கவேண்டும்.என்றும் கூறி இருந்தார்.தனது சகோதரனுக்கு தனது தந்தை பெண்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறி வளர்ப்பதாக கூறி இருந்தார்.மேலும் இன்றைய சமூகம் எதிர்கொள்வது இந்த துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும்போது ஆண்கள் பெரியபதவிகளிலும் அரசியல்வாதிகளாகவும் இருப்பதால் அப்பிடியான சூழலை சமூக ஊடகங்களை பயன்படுத்தி எதிர்கொள்ளமுடியும் என்றும் கூறி இருந்தார்.



இதில் மிகவும் சிறப்பான விடயம் யாதெனில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கஸ்ரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள பாடசாலைநாட்களில் கற்று சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று கூறி இருந்தார்.இதனைபற்றி கூச்சப்படாமல் அனைவரும் பேசவேண்டும் கூறி தனது நேர்காணலை நடிகை சுனைனா முடித்திருந்தார்.

Advertisement

Advertisement