• Jul 25 2025

"எனக்குப் பயமாக இருந்தது, பயப்பிடாதே என்றார்"... பொன்னியின் செல்வன் பூங்குழலியின் சுவாரஷ்ய பேட்டி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்கள் பலரதும் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதுமட்டுமல்லாது கட்டா குஸ்தி படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.  


இதனையடுத்து மலையாள நடிகையான இவருக்கு தமிழ் ரசிகர்கள் பலரும் உருவாகத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து நாளை 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினருடன் இணைந்து தீவிரம் காட்டி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.


அந்த வகையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பூங்குழலியாக நடித்த அனுபவம் குறித்து பல சுவாரஷ்ய விடயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது அதில் அவர் "முதலில் தனக்கு பூங்குழலி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க பயமாக இருந்தது எனவும், அப்போது இயக்குநர் மணிரத்தினம் அவர்கள் தன்னிடம் மிகுந்த நம்பிக்கை கொடுத்து, பயப்படாதே உனது கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும், மிக முக்கியமானது. உன்னால் முடியும் என்று மோட்டிவேட் செய்ததாகவும்" உணர்ச்சிபூர்வமாக கூறியிருக்கிறார்.


இவர் அளித்த இந்தப் பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement