• Jul 24 2025

விஜய்யின் அந்தப்படத்தில நான் தான் நடிச்சிக்க வேண்டியது மேனேஜரால் எல்லாமே மாறிடுச்சு- கவலையில் இருக்கும் நடிகர் அப்பாஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1996-ம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் அப்பாஸ். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் உள்ளனர். அப்பாஸ் தற்போது  குடும்பத்தாருடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார்.


இந்நிலையில் இவர் பிரபல சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது சினிமா வாழ்க்கை மற்றும் உடல்நலம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நீங்கள் தானா? என்ற கேள்விக்கு அப்பாஸ், "காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிக்க வேண்டி இயக்குநர் பாசில் என்னை நடிக்க வைக்க அனுகியுள்ளார்.


அப்போது எனது மேலாளர் கால்சீட் தேதி வழங்கவில்லை. அது எனக்கு தெரியாது. அந்த படம் மிஸ் ஆன பிறகு தான் தெரிந்தது. என்னோட மேனேஜர் இந்த படம் பற்றி எனக்கு சொல்லாமல் வேறு வேறு படங்களில் கால்சீட் தேதி வழங்கி விட்டார்". என அப்பாஸ் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement