• Jul 24 2025

அதை நான் பாத்துட்டேன் அப்பவே பயங்கரமா ரியாக்ட் பண்ணிட்டேன்-தளபதி 67 அப்டேட் குறித்து பதில் அளித்த சந்தீப் கிஷன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்தார். மாநகரம் திரைப்படம் சந்தீப் கிஷனை ரசிகர்கள் மத்தியில்  பிரபலமாக்கியது.

லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன்  இரண்டாவது முறையாக இணைந்து தளபதி 67 என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.


இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.நடிகர்கள் மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், த்ரிஷா, பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்‌.சமீபத்தில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது 

. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் வழங்கும் மைக்கேல் படம் நாளை ரிலீஸ் ஆவதையொட்டி நடிகர் சந்தீப் கிஷன் பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தளபதி 67 படம் குறித்த கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். தளபதி 67 குறித்து சந்தீப் கிஷன் கூறியதாவது:- "லோகேஷ் கனகராஜ் & விஜய் போஸ்டர் ரொம்ப பிடிச்சிருந்தது. இதுக்கு மேல வேற எதுவும் சொல்ல விரும்பவில்லை. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதை நான் முதல்லயே பாத்துட்டேன். அப்பவே பயங்கரமா ரியாக்ட் பண்ணிட்டேன். பார்க்கவே மகிழ்ச்சியா இருந்தது". என சந்தீப் கிஷன் பதில் அளித்தார்.




Advertisement

Advertisement