• Jul 24 2025

பயில்வான் இறந்தால் கண்டிப்பாக இதை செய்து கொண்டாடுவேன்- கொந்தளித்த ரேகா நாயர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் உள்ள  நடிகர், நடிகைகள், கலைஞர்கள் என ஒருவரை விடாமல் ஏடாகூடமாக கேள்விகளைக் கேட்டும் அவர்களைப் பற்றி தவறாகப் பேசி சர்ச்சைகளில் சிக்கி வருவதும் உண்டு.

அப்படி ஒருமுறை பிசாசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதன், நீங்கள் பிசாசு என்பதால்தான் கருப்பு உடையில் வந்திருக்கிறீர்களா என பாலாவிடம் வாயை விட, அதற்கு பாலாவோ பிசாசு என்றால் கருப்பு சட்டை போட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பிங்க் கலர் சட்டைக்கூட போட்டிருக்கலாம் என தனக்கேயுரிய பாணியில் பதிலடி கொடுத்தார். அந்த விழாவின்போது பயில்வான் ரங்கநாதன் பிங்க் கலர் சட்டை போட்டிருந்தார்.


இது தவிர பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததைக் கூட அவதுாறாகப் பேசி சர்ச்சையில் சிக்கியதோடு  திருவான்மியூரில் அவர் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது பயில்வானிடம் சண்டைக்கு சென்றார் ரேகா நாயர். மேலும், அவரை அடிக்கவும் முயன்றார். அதேபோல் நடிகை ராதிகா ஒருமுறை பயில்வான் ரங்கநாதனை செருப்பால் அடித்த சம்பவமும் நடந்தது.

இந்நிலையில் ரேகா நாயர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நரகாசூரன் இறந்ததை பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். அதுபோல் பயில்வான் ரங்கநாதன் இறந்தால் நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். ஞாயத்தை சொல்லி சம்பாதிக்கலாம் ஆனால் இல்லாததை சொல்லி சம்பாதிக்கவே கூடாது. நான் வாழும் காலத்தில் இருக்கும் மிக மோசமான மனிதர் அவர்.


நான் திருவான்மியூரில் அவ்வாறு பயில்வானிடம் நடந்துகொண்டதை அடுத்து பெரிய நடிகர்கள் பலர் எனக்கு ஃபோன் செய்து யம்மா உனக்கு கோடி புண்ணியம் என்றார்கள். ஆண் என்ற போர்வையில் திரியும் பிணம். பிணத்துக்குக்கூட மரியாதை கொடுக்கலாம். ஆனால் இதுக்கெல்லாம் கொடுக்க முடியாது. அது ஒரு ஜந்து. இதற்கு மேல் பேசினார் வாய்ல என்னவெல்லாமோ வரும் என்றே தெரியவில்லை என கூறியுள்ளார். இவரது பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement