• Jul 25 2025

லியோ படம் ஆயிரம் கோடி வந்திட்டு என்று விஜய் சொல்லட்டும் காலில் விழுறேன்- தொகுப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீசை ராஜேந்திரன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளத். ஆயுத புஜை விடுமுறையை முன்னிட்டு சோலோவாக களமிறங்கிய லியோ, முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனால், வரும் நாட்களிலும் லியோ படத்தின் கலெக்‌ஷன் செம்ம மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இரண்டாம் நாளிலேயே ரூ200கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. நாளை முதல் விடுமுறை என்பதால் இன்னும் தியேட்டர்கள் அதிகரிக்க படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


தமிழ்நாட்டை போலவே ஆந்திராவிலும் லியோ படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு விஜய்யின் கேரியரை அங்கு இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம். இது ஒர புறம் இருக்க, லியோ படம்  வெளியா முதல் ஆயிரம் கோடி வசூல் செய்தால் தன்னுடைய மீசையை எடுப்பேன் என்று மீசை ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.

எனவே இதனால் இவரை பிரபல யூடியூப் சேனல் பேட்டியெடுத்தது. அப்போது,லியோ படம் ஆயிரம் கோடி வசூல் செய்ய வாய்ப்பே இல்லை, இப்பவும் அதை தான் சொல்லுறேன். 5 நாளுக்கு பிறகு கூப்பிடுங்க விஜய் சேர் சொல்லட்டும் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் பெற்று விட்டது என்று நான் அவர் கால்ல விழுறேன்.


ஜெயிலர், 2.0 படம் பெற்ற கலெக்ஷனை லியோ கண்டிப்பா பெறாது.அப்படி வசூல் அடித்தால் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன். லியோ படம் பார்க்க போன போது கூட ரசிகர்கள் வந்து போட்டோ எடுத்தாங்க இது பற்றி பேசவே இல்லை. தனிப்பட்ட ரீதியில் லியோ படம் எனக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement