• Jul 24 2025

படுக்கை அறைக்கு அழைத்தால் சினிமாவை விட்டே போய்டுவேன்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய கீர்த்தி சுரேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்திலே மிகப் பெரிய இடத்தை பிடித்து இருக்கும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் தெலுங்கு , மலையாளம் என மாறி மாறி பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் கீர்த்தி நடித்து முடித்து இருக்கிறார்.இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நிலைமை குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில். “சக நடிகைகள் சினிமாவில் இருக்கும் பாலியல்  தொல்லைகள் குறித்து என்னிடம் பேசி உள்ளனர்.


எனக்கு அதுபோன்ற சம்பவம் எதுவும் ஏற்படவில்லை. யாரும் என்னிடம் தவறான நோக்கில் நெருங்கவில்லை. யாரேனும் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதற்காக என்னை தவறான கண்ணோட்டத்தில் அணுகி பாலியல் தொல்லை கொடுத்தால் நான் அந்த வாய்ப்பை உதறி தள்ளி விடுவேன். சினிமாவை விட்டு விலகி வேறு வேலைக்கும் போய் விடுவேன்" என்றார்.

மேலும் கீர்த்தி சுரேஷ் இது தவிர ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்தாண்டு ஓடிடியில் வெளியான கீர்த்தியின் சாணி காயிதம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement