• Jul 23 2025

சேலையை உருவி, அப்படியே பெட்ல தூக்கிப் போடுவேன் பின்னர் மன்னிச்சிடு தங்கச்சி என்பேன்- நடிகர் Mansoor Ali Khan கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வில்லனாக வலம் வந்தவர் தான் மன்சூர் அலிகான்.கேப்டன் பிரபாகரன், தாயகம் உள்ளிட்ட பல படங்களில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்து பிரபல்யமானவர்.இவர் தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அப்போது ரசிகர் ஒருவர் ஸ்டேஜிலேயே க்ளிசெரின் போடாமல் அழுவீங்களான்னு ஒரு ரசிகர் கேட்க, நானெல்லாம் சினிமாவில் டிப்ளோமா வாங்கிட்டு நடிக்க வந்தவன், அழுகை சீன் என்று சொன்னால், க்ளிசரின் எல்லாம் போட்டுக் கொண்டு கண்ணை வீணாக்க மாட்டேன்  என்றார்.


தொடர்ந்து பேசிய அவரிடம் அப்போதெல்லாம் சினிமாவில் வில்லன்கள் நடிகைகளின் ஆடைகளை உருவி கிளைமேக்ஸ் காட்சிகளில் அத்துமீறி நடிக்கும் காட்சிகளை எப்படி படமாக்குவாங்கன்னு ஆர்வத்துடன் கேட்ட ஒரு ரசிகருக்கு ரம்யா கிருஷ்ணன், வினிதா என பல ஹீரோயின்களுடன் அதுபோன்ற சீன்களில் நடிச்சிருக்கேன்.


சேலையை உருவி, அப்படியே பெட்ல தூக்கிப் போடுவேன். அப்போதெல்லாம் ரீல் தானே, ஒரு டேக்கில் ஓகே ஆகாது. ஒரு டேக்கில் ஓகே ஆகவில்லை என்றால் உங்களுக்கு ஹேப்பி, டைரக்டர் வந்து சீனை ஒழுங்கா நடிம்மான்னு திட்டுவார். அந்த சீன் முடிந்தவுடன், மன்னிச்சிடு தங்கச்சின்னு சொல்லிட்டு போயிடுவேன் என படு கேஷுவலாக பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement