• Jul 25 2025

''கல்யாணம் பண்ணிக்க மாட்டன்..தொல்லை பண்ணாதீங்க.''.நடிகை ஓவியாவின் கியூட் ஸ்பீச்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ஓவியா சினிமாவில் பெற்ற புகழை விட பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலமாக பெற்ற புகழ் தான் அதிகம். அவருக்கு ஆர்மி எல்லாம் ரசிகர்கள் அந்த நேரத்தில் தொடங்கினார்கள். ஆனால் அந்த ஷோவில் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் அதற்க்கு பின் நடித்த 90ml உள்ளிட்ட படங்கள் அதிகம் ட்ரோல்களை சந்தித்தது. அதற்கு பிறகு ஓவியா அதிகம் படங்களில் நடிப்பதில்லை.

இந்நிலையில் நீண்ட கால இடைவெளிக்கு பிறகு லைவ் வந்த நடிகை ஓவியா ..ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியும் ,டான்ஸ்  ஆடி ,சாங் பாடி கலகலப்பா பேசிட்டு லவ் யூ,மிஸ் யூ சொல்லி ரசிகர்க்ளோடு டைம் ஸ்பென்ட் பண்ணி இருந்தாரு.  

அந்த நேரம் கூடுதலான ரசிகர்கள் மீண்டும் ,மீண்டும் எப்போ உங்களுக்கு கலியாணம் என்ற கேள்வி கேட்டார்கள் ..அதற்கு ஓவியா  '' நான் கலியாணமே பண்ணிக்க போறதில்ல ,அந்த கொஸ்டின் மட்டும்  கேக்காதீங்க, ஏன் இந்த கொஸ்டின்கேட்டு உயிரை எடுக்கிறீங்க. நான் எப்படி இருந்தானோ அப்படி தான் இருப்பன்.என கூறினார்.

Advertisement

Advertisement