• Jul 23 2025

என்னிடமும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்பாங்க எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கும்- ஓபனாகவே பேசிய பிரபல நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

படங்களில் நடிப்பது மட்டுமல்லாது இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தமது திறமையை வெளிப்படுத்திய பல பிரபலங்கள் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் பிரியங்கா நாயர். இதுவரை இன்ஸ்டாவில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு கிட்டத்தட்ட 80 மில்லியன் வியூவர்ஸை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர பல குறும்படங்களிலும் நடித்திருக்கின்றார்.அது மட்டும் இல்லாமல் ஒரு சில படங்களில் நடன இயக்குநராகவும் இருந்திருக்கிறாராம். மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 என்ற படத்தில் நடன இயக்குநராக சேர்ந்த பிரியங்கா அவர்களின் சில டான்ஸ்கள் பிடிக்காம ல் ஆண்ட்ரியா அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம் .அதனால் பிரியங்கா நாயர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.


இந்த நிலையில் இவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில்அப்பா இல்லாத பிரியங்கா நாயர் தனது அம்மா மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய சகோதரனுக்கு ஏதோ ஒரு நோய் இருப்பதால் இவர்தான் குடும்பத்தை பார்த்து வருகிறாராம்.மேலும் 10 வருடங்களாக கமிட்டில் இருக்கும் பிரியங்கா நாயர் தன்னுடைய காதலனுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்து வருகிறாராம். அதுவும் தன் காதலனின் பெற்றோர்கள் மற்றும் தன்னுடைய பெற்றோர்கள் இவர்களை எல்லாம் ஒன்றாக இணைத்து தான் இவர்களும் குடும்பத்தை நடத்தி வருகிறார்களாம்.

டான்ஸ் தான் பிரியங்காவுக்கு உயிராம். பள்ளிப்பருவத்தில் முறையாக பரதம் கற்றுக் கொண்ட பிரியங்கா நாயர் 10 வகுப்புக்கு பிறகு அதை தொடர் முடியவில்லையாம். அதன் பிறகு வீடியோ , டான்ஸ் என பார்த்து பார்த்து நடனத்தை கற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் எல்லோ நடிகைகளுக்கும் உரிய ஒரு பிரச்சனையான அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பிரியங்கா நாயரையும் தேடி வந்திருக்கிறது. அதை பற்றி கேட்கையில் “என்னிடமும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்பார்கள். ஆனால் அதை நான் பெருமையாக நினைப்பேன். ஏனெனில் நடித்துக் கொடுத்த பிறகு அந்த மாதிரி கேட்டால் தான் பிரச்சனை வரும். 


ஆரம்பத்திலேயே கேட்டால் நமக்கு அது பிடிக்காமல் அந்த ப்ராஜெக்டில் இருந்தே விலகி விடுவோம் .அதனால் என்னிடம் கேட்கும்போது நான் வேண்டாம் என சொல்லி விடுவேன்”. என  பிரியங்கா நாயர் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement