• Jul 26 2025

அபிஷேக் சொன்னால் நம்புவீங்க சேர் சொன்னால் நம்ப மாட்டீங்களா- ப்ரியங்காவை மன்சூர் அலிகானிடம் கோர்த்து விட்ட ராஜு

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்த கொண்டு டைட்டில் வின்னர் ஆகத் தேர்வாகியவர் தான் ராஜு. இந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற முதல் சில திரைப்படங்களிலும் பல சீரியல்களிலும் நடித்திருக்கின்றார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வேற லெவலில் பிரபல்யமடைந்துள்ளார்.

இதனால் தற்பொழுது விஜய் டிவியில் ராஜு வீட்டில பார்ட்ரி என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றார். காமெடி கலந்த இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கெஸ்ட் அழைக்கப்பட்டு வருகின்றனர்.


அந்த வகையில் கடந்த வாரம் வெங்கட் பிரபு மற்றும் விஜயலக்ஷ்மி படக்குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் இந்த வாரம் நடிகர் மன்சூர் அலிகான் அழைக்கபட்டுள்ளதாக புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.


அதில் ப்ரியங்கா மன்சூர் அலிகானிடம் பிக்பாஸ் கூப்பிட்டா வருவீங்களா என்று கேட்டபோது அவர் நான் அந்த நிகழ்ச்சி பார்த்ததே இல்லை என கூற ராஜு அபிஷேக் சொன்னால் நம்புவீங்க சேர் சொன்னால் நம்ப மாட்டீங்களா எனக் கேட்க அனைவரும் சிரிக்கின்றனர்.


இதனால் இந்த ப்ரோமோவைப் பார்த்தால் இந்த வாரமும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement