• Jul 23 2025

அசீம் Abuse பண்ணினாரு என்றால் அவரும் என்னை Abuse பண்ணியிருக்காரு- விளக்கம் கொடுத்த தனலட்சுமி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த மாம் பிரமாண்டமாக முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.இதில் டைட்டில் வின்னராக அசீம் தெரிவு செய்யப்பட்டார்.இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்து இருந்தனர்.


தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தாலும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருவதையும் நாம் கவனித்திருப்போம். அதே போல, பிக் பாஸ் போட்டியாளர்கள் எங்கே போனாலும் மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு அதிகம் இருந்து வருகிறது.


இந்த நிலையில் பிரபல சேனல் பிரத்யேகமாக நடத்திய "மக்களுடன் அசீம்" என்ற நிகழ்ச்சியில் அசீம் கலந்து கொண்டார். அவருக்கு அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் அசத்தலான வரவேற்பை வழங்கி இருந்தனர். இதில் தனலட்சுமியும் விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். பிக் பாஸ் வீட்டில் அவர்கள் இருவரும் அதிகம் சண்டை போட்டிருந்தாலும் இறுதியில் அண்ணன், தங்கை போல தான் மாறி இருந்தனர். அப்படி ஒரு சூழலில் மக்களுடன் அசீம் என்ற நிகழ்ச்சியிலும் தனலட்சுமி கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பேசி இருந்தார்.முன்னதாக பிக் பாஸ் வீட்டில் Doll டாஸ்க் ஒன்றின் போது அசீம், தனலட்சுமியை Abuse செய்து அவர் உடலில் கைவைத்ததாக கருத்து ஒன்று பரவி இருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக தற்போது தனலட்சுமியே விளக்கம் கொடுத்துள்ளார்.


"Abuse -ங்குற வார்த்தைக்கு என்ன அர்த்தம். ஒருத்தர் வந்து என்னை தப்பா தொட்டுட்டான் இல்ல ஏதாவது பண்ணிட்டாங்குறது தான். அந்த இடத்தில் எனக்கு கோபம் வந்துச்சு, ஏன்னா அந்த இடத்துல கோபத்துல இப்படி பிடிச்சு தள்ளுனது எனக்கு தப்பாபட்டுச்சு. ஆனா, தப்பா Abuse பண்றதுக்காக தொட்டாங்கன்னா நான் ஏத்துக்கவே மாட்டேன்.இத சொன்னவரே என்ன பண்ணி இருக்காரு, Tunnel டாஸ்க்ல என் கால புடிச்சு லாக் பண்ணி, என்ன வெளியே எடுத்து இருக்காரு. அப்படி புடிச்சதுக்கு பேரு Abuse இல்லையா. அதுவும் எதுக்காக, அவரு நாமினேஷன் Free Zone அப்படிங்குறதுக்காக. அவர் உள்ள இருக்கணும் அப்படின்றதுக்காக என்னை இப்படி உள்ள புடிச்சு தள்ளி வெளியே எடுத்து போட்டாரு. அசீம் பண்ணது Abuseன்னு சொன்னா அவரு பண்ணது Abuse தான்" என விளக்கம் கொடுத்துள்ளார்.


Advertisement

Advertisement