• Jul 25 2025

சந்திரபாபுவின் பயோபிக் எடுத்தால் ஹுரோவாக இந்த நடிகரைத் தான் நடிக்க வைப்பேன்- இயக்குநர் கார்த்திக் சுப்ராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தோன்றிய பன்முகத் திறமை கொண்ட பழம்பெரும் கலைஞர்களில் சந்திரபாபுவும்  முக்கியமானவர்,நடிப்பு, பாடல், நடனம் மற்றும் இயக்கம் என பலத்துறைகளில் சாதித்த அவர் ஒரு கட்டத்தில் பயங்கர வறுமைக்கு ஆளாகி பல கஷ்டங்களை அனுபவித்தார். 

அதே போல அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பல சோகங்களைக் கொண்டது.எம் ஜி ஆரால் வாழ்ந்த பல தயாரிப்பாளர்கள் உண்டு என சொல்வது போல எம் ஜி ஆரால் வீழ்ந்த ஒரு தயாரிப்பாளராக சந்திரபாபுவை சொல்லலாம். இப்படிப் பட்ட சந்திரபாபுவின் பயோபிக்கை எடுக்கும் ஆசை உள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். 


மேலும் அப்படி எடுத்தால் அதில் ஹீரோவாக தனுஷை தான் நடிக்க வைக்கப்படுவதாக விருப்பப்படுவதாக கூறியுள்ளார். அந்த தகவல் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் எப்படிப்பட்ட கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதனை சிறப்பாக எடுத்து நடிக்கக் கூடிய நடிகராகவே தனுஷ் விளங்குகின்றார். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திருச்சிற்றம்பலம் திரைப்படமும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement