• Jul 26 2025

அவர் வரவில்லை என்றால் கட்டித் தூக்கிட்டு வாங்க- வடிவேலுவைத் தூண்டில் போட்டுத் தூக்கிய ஏஆர் ரஹ்மான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில்  உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன்.ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 29ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.கமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இவ்விழாவில் இன்னும் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் மாமன்னன் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானும் பாடல் பாடி அசத்தினார். அதேபோல் ராசா கண்ணு பாடலை பாடுவதற்காக வைகைப்புயல் வடிவேலுவும் மேடையேறினார். அப்போது இசைப்புயலும் வைகைப்புயலும் மேடையில் செய்த அட்ராசிட்டி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


முதலில் சங்கமம் படத்தில் எம்.எஸ்.வி பாடிய 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கம்' பாடலின் இருவரிகளை பாடினார் வடிவேலு. அதன்பின்னர் ராசா கண்ணு பாடலை பாடிய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். "ராசா கண்ணு பாடலை நான் தான் பாட வேண்டும் என ஏஆர் ரஹ்மான் மாரி செல்வராஜ்ஜிடம் கூறியுள்ளார். 

உடனே எனக்கு கால் பண்ண மாரி செல்வராஜ், ராசா கண்ணு பாடலை பாட வாங்கண்ணேன்னு கூப்பிட்டார். அப்போது நான் பாடினால் நல்லா இருக்குமா என மாரி செல்வராஜ்ஜிடம் கேட்டேன். அதற்கு நீங்க வரவில்லை என்றால் உங்களை கட்டித் தூக்கிட்டு வாங்கன்னு ஏஆர் ரஹ்மான் சார் சொல்றார்" எனக் கூறினார் என்று வடிவேலு காமெடியாகப்  பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement