• Jul 25 2025

அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கூப்பிட்டா செருப்பாலையே அடிப்பேன்- ரேகா நாயரின் அதிரடியான பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!


இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் ரேகா நாயர். இவர் அண்மையில் பிரபல சேனலில் நடிகை ஷகிலா தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பல சுவாரஸியமான விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியதாவது நான் கேரளாவைச் சேர்ந்தவள். எங்கட பெரியம்மா வந்து கோயம்பத்துார்ல இருந்தாங்க அவங்களோட வந்து இருந்து தான் தமிழ் படிச்சேன். அதுக்கப்பிறம் படிச்சு முடிச்சிட்டு ரீச்சர் வேலை பாரத்தேன். பின்பு ரேடியோ ஜோக்கியாகத் தான் முதலில் சினிமாவில் வந்தேன்.


அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஆண்டாள் அழகர் என்னும் சீரியல் மூலம் தான் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். இதனைத் தொடர்ந்து விஜய்டிவி கலர்ஸ் தமிழ் ஷு தமிழ் என அனைத்து டிவியிலையும் நடிச்சிட்டேன்.

அதன் பின்பு கதகளி என்னும் படத்தில் நடித்திருந்தேன் தொடர்ந்து சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடிச்சிட்டு வாரேன் என்று கூறியுள்ளார். அத்தோடு சினிமாவிற்கு வந்ததில இருந்து என்னை யாரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி சொல்லல.

அப்படி யாரும் கேட்டால் செருப்பால அடிப்பேன்.பிடிக்கல என்றால் பிடிக்கல என்று நேராக சொல்லனும் போயிட்டு வந்திட்டு அவன் என்னை அப்படி கூப்பிட்டு யூஸ்ட் பண்ணிட்டான் என்று கூறுவதெல்லாம் தப்பு என்றும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement