• Jul 24 2025

நான் திடீரென இறந்தால் அது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை- TTF வாசன் சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

யூடியூப் பக்கத்தில் பைக் ரைடிங் வீடியோக்களைப் பதிவிட்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் TTF வாசன்.இவர் அடிக்கடி  பைக்கில் அதிக வேகமாக சென்று சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார்.

இதனை அடுத்து தற்பொழுது மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் படத்தின் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.


சமீபத்தில் TTF வாசன் சென்ற கார் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளானது. இதற்கு சில மீடியாக்கள் TTF வாசன் விபத்து ஏற்படுத்தி அங்கு இருந்து ஆட்டோவில் தப்பி ஓடியதாக கூறப்பட்டது.இந்நிலையில் இது குறித்து பேசிய TTF வாசன், அந்த காரை நான் ஓட்டவில்லை இயக்குநர் தான் ஓட்டினார். அந்த சமயத்தில் கார் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளானது.

காரின் முன்னால் சென்று கொண்டிருந்த ஒருவருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. நான் உடனடியாக முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றோம் ஆனால் மீடியாக்கள் என் மீது பொய்யான தகவலை பரப்பியதாக கூறியுள்ளார்.


மேலும் அவர், என்னை தற்கொலைக்கு தூண்டும் வகையில் சிலர் நடந்து கொள்கிறார்கள். நான் தற்கொலை செய்து கொண்டேன் என்ற செய்தி வந்தால் அதை யாரும் நம்பாதீர்கள் அது ஒரு திட்டமிட்ட கொலை என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement