• Jul 26 2025

60 வயது தயாரிப்பாளரை நேரில் கண்டால் செருப்பால் அடிப்பேன்-பிரபல நடிகையின் பரபரக்கும் பேட்டி-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் கொடுமை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.அந்த வகையில் பிரபல நடிகை ரத்தன் ராஜ்புத்தாவும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 பிரபல நடிகையான ரத்தன் ராஜ்புத், தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான அக்லே ஜனம் மொஹெ தொடர் அவருக்கு பெரும் அங்கீகாரத்தை கொடுத்தது.



அதனைத்தொடர்ந்து, இந்தி பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். மேலும் இந்த நிலையில், திரைப்பட வாய்ப்புக்காக தனக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டதாக பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.



மேலும் இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு மும்பைக்கு வந்த நேரங்களில் நிறைய துன்பங்களை சந்தித்து இருக்கிறேன். 60 வயதாகும் தயாரிப்பாளர் என்னை தவறாக அணுகினார்.



 எந்த விஷயத்தையும் நான் இலவசமாக செய்யமாட்டேன் என்றும் தெரிவித்தார்.அவரிடம் நான் எனது தந்தை வயது உங்களுக்கு ஆகிறது என்று கூறி மறுப்பு தெரிவித்தேன். இப்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் செருப்பால் அடிப்பேன்" என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement