• Jul 25 2025

ஐந்து நாட்கள் வேலை செய்தால் குடும்பத்தை பார்ப்பேன் 10 நாட்கள் வேலை செய்தால் மற்றவர்களுக்கு உதவுவேன்; வைரலாகும் மயில்சாமியின் பேச்சு

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி கடந்த வாரம் மாரடைப்பால் காலமானார்.இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்த இவர் நடிப்பைத் தாண்டி உதவி என கேட்டு வருவோர்க்கு ஓடோடி உதவி செய்யும் மனப்பான்மையை உடையவராகவும் இருந்திருக்கின்றார்.

இவர் இறப்பை அடுத்து பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கலைத் தெரிவிப்பது மட்டுமல்லாது அவர் குறித்த நல்ல விடயங்களையும் கூறி வருகின்றனர்.இந்த நிலையில் மயில்சாமி அண்மையில் பேசிய விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது 


நான் மாதத்தில் ஐந்து நாட்கள் வேலைக்கு சென்றால் என் குடும்பத்தை பார்த்துப்பேன், அதே பத்து நாட்கள் வேலைக்கு சென்றால் என்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்வேன்.ஆனால் என்னால் ஒரு மாதத்தில் பத்து நாட்களுக்கு மேல் வேலை செய்ய முடியாது என கூறியுள்ளார் . வாழ்க்கையில் ரொம்ப பிசியா இருக்குறது எனக்கு பிடிக்காது என பேசியுள்ளார் .




Advertisement

Advertisement