• Jul 25 2025

எனக்கு பிடித்த படமாக இருந்தால் மட்டும் தான் சம்பளம் குறைவாக கேட்பேன்- கடும் கோபத்தில் பிரகாஷ் ராஜ்

stella / 3 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து பிரபல்யமானவர் தான் பிரகாஷ் ராஜ். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு கன்னட மொழிகளிலும் நடித்து பிரபல்யமானவர்.தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் தற்போது,ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் கேட்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

நான் ஒரே மாதிரியான கேரக்டர் ரோல்களில் நடிக்க விரும்புவதில்லை. ஆனால், நான் நடித்து வெளியான காஞ்சிவரம், இருவர் பொம்மரிலு, ஆகாச மந்தா, மேஜர் ஆகிய படங்களில் ஒரு வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது ஒரு தொழில்தான். ஆனால், கமர்ஷியல் படங்ககளில் நடிக்க அதிகச் சம்பளம் வாங்கிக்கொண்டு எனக்குப் பிடித்த படமாக இருப்பின் குறைந்த சம்பளம் வாங்கிக் கொள்வேன்.

முன்னணி நடிகர்களுடன் 30 ஆண்டு அனுபவமுள்ள நடிகர்கள் போட்டியிட வேண்டியதுள்ளது. நட்சத்திர அந்தஸ்து அடையாளம் என்பது இப்போது மாறிவிட்டது. மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்தால்தான் ரசிகர்களின் பாராட்டை பெறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement