• Jul 24 2025

"நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் தளபதியுடன் நடிப்பேன்"..நிறைவேறுமா? இவருடைய ஆசை!

Prema / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு என முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலர் டீச்சர் என்று அழைக்கப்பட்டு ரசிகர்களிடத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தவர். அதாவது அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-இல் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் ஊடாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து பா.விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 'மாரி-2, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து வந்த சாய்பல்லவி சில ஆண்டுகள் இடைவேளைக்குப் பின்னர் 'கார்கி' திரைப்படத்தில் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

வருகின்ற ஜூலை 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் ஃப்ரமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாய் பல்லவியிடம் தளபதி விஜயுடன் இணைந்து நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சாய்பல்லவி "நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் கண்டிப்பாக தளபதியுடன் படம் பண்ணுவேன்" என்று தனது பாணியில் கூறியுள்ளார்.

இந்தநிலையில் இதைக்கேட்ட சாய்பல்லவியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அத்தோடு விரைவில் இவர்கள் இருவரின் கூட்டணியை பார்க்கவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement