• Jul 23 2025

விஜய் பார்த்தால் கண்டிப்பாக எங்களை அழைப்பார்! திரையரங்கிற்கு வந்த மாற்றுத்திறனாளி உருக்கம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி  விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் ஐந்து மொழிகளில் இன்றைய தினம் உலகளவில் வெளியாகியுள்ளது. 

'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 

லியோ படத்தை திரையரங்குகளில் பார்த்துவரும் ரசிகர்கள் படம் செம்மையாக உள்ளதென கருத்து சொல்லி வருகின்றனர். 

இந்த நிலையில், விஜயின் லியோ திரைப்படத்தை பார்ப்பதற்கு  கோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் மிகவும் உற்சாகத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத்தில்  திரையரங்கிற்கு வந்திருந்தார்.


இதன்போது அவரும், அவருடைய நண்பரும் கருத்து கூறுகையில், லியோ திரைப்படத்தின் முதல் அப்பேட் வந்ததிலிருந்து சுமார் ஒரு வருட  காலமாகவே இப்படத்தை காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்தோம்.மாற்றுத்திறனாளி என்பதால் தனக்கு டிக்கெட் இலவசமாகவே வழங்கப்பட்டது என்றார்.

மேலும் கூறிய அவர், விஜயை நேரில் காண வேண்டுமென கோரிக்கையும் விடுத்திருந்தார். தொலைக்காட்சி வாயிலாக இதனை விஜய் பார்த்தால் கண்டிப்பாக தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதெனவும் மேலும்  தெரிவித்தனர்.


Advertisement

Advertisement