• Jul 25 2025

அடுத்தவங்களை பற்றி யோசிக்காமல் இருந்தாலே நமக்கு சக்சஸ் கிடைக்கும்- யோகி பாபு சொன்ன சீக்ரெட்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகராக முன்னணி நடிகர்களுடன் இணைந்து , தன்னுடைய காமெடி கலாட்டாக்கள் மூலம் எராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகர் தான் யோகிபாபு.மேலும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றிப்பெற செய்துள்ளார். தற்போது ஹீரோ மற்றும் காமெடியன் என இரு தளங்களிலும் பயணித்து வருகிறார்.

சமூக வலைதளங்களலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். முருகர் பக்தரான யோகிபாபு, அடுத்தடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முருகன் புகைப்படங்களை பகிர்ந்து வருவதுடன், முருகர் கோயில்களுக்கு தான் விசிட் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திருச்செந்தூர் கோயிலில் யோகிபாபு சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 


தொடர்ந்து கிரிக்கெட்டிலும் யோகிபாபுவிற்கு ஆர்வம் அதிகம். தான் கிரிக்கெட் ஆடும் வீடியோக்களையும் அவர் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தான் கிரிக்கெட் ஆடும் வீடியோவையும் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், தற்போது அவர் பிரபல சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


 அந்தப் பேட்டியில் யாரைப்பார்த்தும் பொறாமைப்படாமல் நம்முடைய வேலையை நாம் பார்க்க வேண்டும் என்றும் யார் என்ன செய்கிறார்கள் என்று யோசிக்க வேண்டாம் என்றும் மற்றவர்கள் குறித்து யோசித்தால் நாம் அப்போதே காலியாகி விடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாம் என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தாலே சக்சஸ் நம் வசமாகிவிடும் என்றும் யோகிபாபு அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement