• Jul 25 2025

என்னோட படத்தில் நடிச்சால் அப்படித் தான் ட்ரெஸ் பண்ணனும்- சல்மான் கான் குறித்து பிரபல நடிகை சொன்ன பதில்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சல்மான் கான் மற்ற பாலிவுட் நடிகர்களை போல எல்லாம் கிடையாது. ஆன்ஸ்க்ரீனில் எப்போதுமே நடிகைகளின் உதட்டில் முத்தம் கொடுப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறார். மேலும், ஏகப்பட்ட ரூல்கள் சினிமாவில் இருக்க வேண்டும் என்றும் பெண்களின் ஆடை விஷயத்திலும் அதிக கவனமும் செலுத்தி வருபவர் எனக் கூறுகின்றனர்.

கிஸி கா பாய் கிஸி கி ஜான் படம் விரைவில் வெளியாக போகிறது. அந்த படத்தில் சல்மான் கான் நீண்ட முடியுடனும் ஷார்ட் கட் ஹேர் உடனும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஷெனாஸ் கில், பாலக் திவாரி, வெங்கடேஷ் டகுபதி மற்றும் நட்புக்காக ராம்சரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் பெண்கள் உடுத்தும் ஆடை குறித்து ஒரு ரூல் புக்கே சல்மான் கான் வைத்திருக்கிறார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலக் திவாரி பேசி உள்ளார்.

பெண்கள் யாரும் கழுத்துக்கு கீழே அங்கம் தெரியும் அளவுக்கு லோ நெக் உடையை உடுத்துக் கூடாது என்பதை கவனமாக பார்த்துக் கொள்வார் சல்மான் கான் என்றும் தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் வரும் பெண்களுக்கு மற்றவர்களால் எந்தவொரு சங்கடமும் வரக் கூடாது என்பதால் தான் அவர் இப்படி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார் என பாராட்டி உள்ளார்.


ஃபுல் சுடிதார் உடையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லும் போது, என் அம்மாவே ஆச்சரியமாக எங்கே போறன்னு கேட்பார், சல்மான் கான் சார் படத்தின் ஷூட்டிங்கிற்கு என்றதுமே ரொம்ப சந்தோஷம் என்பார் என பாலக் தீவாரி சல்மான் கான் பெண்கள் மீது காட்டும் அக்கறை குறித்து பேசி உள்ளார். சமீபத்தில் ஓடிடிக்கும் தணிக்கை வேண்டும் என்றும் அதிக ஆபாசமான படங்கள் வெளியாகக் கூடாது என்றும் சல்மான் கான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement