• Jul 24 2025

கதை புரியவில்லை என்றால் இன்னுமொரு முறை பாருங்கள்- ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கோப்ரா பட இயக்குநர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் சில நாட்களுக்கு முதல் வெளியாகியிருந்த திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ நிதி நடித்திருப்பதோடு இப்படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புக்களில் நடித்ததாகவும் கூறப்பட்டது.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.அத்தோடு இப்படம் புரியவில்லை என பல ரசிகர்கள் கூறியும் வருகின்றனர்.


இந்நிலையில் இந்த படம் குறித்து விமர்சனங்களுக்கு அஜய் ஞானமுத்து பதில் கூறியுள்ளார். அதில் கோப்ரா படத்தின் கதி புரியவில்லை என்று கூறியபோது சிக்கலான திரைக்கதை கொண்ட படங்கள் எனக்கு பிடிக்கும் என்றும் அந்த வகையில் இன்னொரு முறை கோப்ரா பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் கூறினார் 

இமைக்கா நொடிகள் படம் போல் இல்லை என்று ஏமாற்றமடைந்த ரசிகர்கள் கருத்து நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்றும் அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் திருப்தி அடையும் வகையில் ஒரு படத்தை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement