• Jul 25 2025

நீங்க கல்யாணம் பண்ணாமல் இருந்திருந்தால் நான் தான் பண்ணியிருப்பேன்- வனிதாவை காதலிக்க ஆசைப்பட்ட பிரதீப்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்சசசியானது ஆரம்பித்த நாளிலிருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சிமோல் ஹவுஸ் என்ற ஒன்று இருப்பதால் போட்டியாளர்கள் இருபிரிவாக இருந்து விளையாடி வருகின்றனர். அடிக்கடி மோதலில் ஈடுபடுவதையும் காணக் கூடியதாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் பிரதீப். இவர் நடிகர் கவினின் நெருங்கிய நண்பன் என்பதும் யாவருக்கும் தெரிந்ததே. கவின் கேரியரில் முக்கிய திரைப்படமான டாடா படத்தில் நடித்திருந்தார்.


ஏற்கனவே பிக் பாஸ் 3ல் தனது நண்பன் கவினை பார்க்க வந்த இவர், செய்த செயல்கள் எதையுமே யாராலும் மறக்கவே முடியாது.குறிப்பாக கவினை அடித்தது தான் பெரிதளவில் பேசப்பட்டது. ஆனால், தற்போது பிக் பாஸ் 3ல் பிரதீப் பேசிய மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது.இதில், வனிதாவை பார்த்து 'நீங்க மட்டும் சின்ன பொண்ணா, கல்யாணம் ஆவாம இருந்தீங்கனா கண்டிப்பாக நான் உங்களை காதலிச்சு இருப்பேன். உங்கள மாதிரி ஒரு ஆள் கூட இருந்தா நான் கண்டிப்பாக இந்த உலகத்தையே ஜெயிச்சுருவேன்' என பேசினார்.

அப்போது ஷெரின், 'இப்போவும் வனிதா சிங்கிள் தான்' என கூற அதற்கு பிரதீப் 'நான் யோசித்து பார்க்கிறேன்' என கூறுவார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வர, வனிதா விஜயகுமார் இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளத்தில் ஜாலியாக ரியாக்ஷன் செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement