• Jul 24 2025

இங்க மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சா பைத்தியம் பிடிச்சிரும்- மாமன்னன் படத்தின் அசத்தலான ட்ரெய்லர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன்'.இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் பகத் பாசில், லால் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் முக்கியமாகும்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 'மாமன்னன்' படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது படங்களின் வாயிலாக சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.


 இதனையடுத்து மாரி செல்வராஜ் தற்போது இயக்கியுள்ள 'மாமன்னன்' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இந்நிலையில் இந்தப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வடிவேலுவின் குரலுடன் துவங்கும் இந்த அசத்தலான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

வடிவேலு, உதயநிதி இருவரும் அப்பா, மகனாக நடித்துள்ளது படத்தின் ட்ரெய்லரிலே தெரிகிறது. அதே போல் பகத் பாசில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.ட்ரெய்லர் முழுக்க பல அழுத்தமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. 'இங்க மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சோம்னா நமக்கு பைத்தியமே புடிச்சுரும்' போன்ற பல மாஸ் வசனங்கள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படம் வரும் 29 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement