• Jul 26 2025

மார்பகங்கள் குழந்தைக்கு பாலூட்டதான் உங்களுக்கு பிரச்சினை என்றால் மூடிட்டு போங்க- கடுப்பான நடிகர் நகுலின் மனைவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகியவர் தான் நகுல். இவர் இதனைத் தொடர்ந்து காதலில் விழுந்தேனன் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹுரோவாக  அறிமுகமாகினார்.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த இவர்,தற்பொழுது நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.இந்நிலையில் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு, பிரபல தொகுப்பாளி ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

அவ்வப்போது தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக சமூக வலைதளத்தில் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஸ்ருதி.

இந்நிலையில் ஸ்ருதி பிரபல இணையதளம் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பேட்டியில் தன்னுடைய குழந்தைகள் பற்றியும்,  தற்போதுள்ள பெண்களின் மனநிலை, பெண்களுக்கான அடக்குமுறை மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது, தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவது என்பது குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


 திருமணம் ஆகிய பின்னர் வேலைக்கு செல்லும் பெண்கள், தன்னுடைய சம்பளத்தை, பெற்றோரிடம் கொடுக்க வேண்டுமா? மாமியாரிடம் கொடுக்க வேண்டுமா என கேட்பார்கள். அதே போல் திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், வருங்கால கணவருடன் போட்டோ எடுத்துக்கொண்டால் கூட தன்னை திட்டுவதாக கூறுகின்றார்கள். இப்படி பட்ட பெண்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமை கூட இன்னும் தெரியவில்லை என்றே நினைப்பதாக கூறியுள்ளார்.

அதேபோல் பிரக்னன்சி போட்டோ சூட்டில் வயிறு தெரியும்படி போட்டோ எடுத்தால் கூட, ஏன் இப்படி போட்டோ எடுக்கிறீர்கள்? என சிலர் தன்னை நோக்கி கேள்வி எழுப்பதாகவும்... ஆனால் இது போன்ற கேள்விகளை நான் தவிர்த்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.


பல வீடுகளில் இப்போதும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகள் பாரபச்சம் பார்க்கப்படுகிறார்கள். பெண் குழந்தை தவறு செய்து விட்டால் அவரின் அம்மாவுடன் ஒப்பிடுவதையும், சிறப்பான விஷயம் செய்தால் அப்பாவுடன் ஒப்பிடுகிறார்கள். அதே போல், பெண் குழந்தை பிறந்தால்  தங்கத்தை பரிசளித்து அப்போதே திருமணத்திற்கு சேர்த்து வை என பேசுகிறார்கள். ஆண் குழந்தை பிறந்தால் பணமாக கொட்டுகிறார்கள் என்பதை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதே போல் தன்னுடைய சமூக வலைத்தளத்தில், தாய் பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஸ்ருதி...  குழந்தைக்கு தாய் பால் கொடுப்பது போல் புகைப்படம் எடுத்து வெளியிட்டால் கூட ஏன் இது போன்ற புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறீர்கள் என என்னை சிலர் விமர்சிக்கிறார்கள். மார்பகங்கள் என்பது குழந்தைக்கு பாலூட்டதான். ஆனால் அதனை செக்ஸ் பொருளாக பார்க்கிறார்கள்... உங்களுக்கு தவறாக தெரிந்தால் கண்களை மூடி கொள்ளுங்கள். தாய் பால் குறித்த விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியம். அது தான் வருக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்கும் என இவர் பேசியுள்ளது பலர் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement