• Jul 25 2025

தனுஷுடன் என்றால் சம்பளமே வேண்டாம்- வெளிப்படையாகப் பேசிய சிம்பு பட நடிகை- அடடே இவர் ரொம்ப கியூட் ஆச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருப்பவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக நானே வருவேன் என்னும் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களையே பெற்றது. 

இதனை அடுத்து வாத்தி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வருகின்றது.வாத்தி படத்தின் அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


மேலும் தனுஷ் இது தவிர கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதையடுத்து சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது.

இந்த நிலையில் ஈஸ்வரன், கலகத் தலைவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருத்தவர் நடிகை நிதி அகர்வால்.இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement