• Jul 24 2025

'மரணச் செய்தியால் மிகவும் துயருற்றேன்'... சந்திரசேகரின் மறைவுக்கு இளையராஜா இரங்கல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களான இளையநிலா, பாடும் வானம் பாடி போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இளையராஜாவுடன் இணைந்து, தன்னுடைய கிட்டார் இசையின் மூலம் பாடல்களை மெருகேற்றி மக்கள் மத்தியில் பிரபலயமானவர் கே சந்திரசேகரன்.


இவர் குறிப்பாக 1995 ஆம் ஆண்டு முதல் 2000 வரை பல விளம்பர படங்களுக்கு இசை வழங்கியுள்ளார். அத்தோடு தமிழ் மட்டுமல்ல கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இவர் இன்றைய தினம் திடீர் மரணமடைந்த மறைவு செய்தி ஆனது தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் இசைப் பிரியர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்நிலையில் சந்திரசேகர் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது இரங்கலினைத் தெரிவித்துள்ளார். அதாவது இதுதொடர்பாக அவர் வெளியிட்டு வீடியோவில் "என்னுடன் பணியாற்றிய எனக்கு மிகவும் பிரியமான இசைக் கலைஞரான சந்திரசேகர் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவர் என்னிடம் பணியாற்றிய புருஷோத்தமனின் சகோதரர் ஆவார். 


நாங்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் மேடையில் இருந்து திரைக்கு வந்த இசைக்கலைஞர்கள். நிறைய பாடல்களில் அவர் வாசித்திருக்கிற கிட்டார் உள்ளிட்ட இசைக் கருவிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார். 

Advertisement

Advertisement