• Sep 08 2025

'எனக்கு கலைஞர் தந்தை சமமானவர்' 79வது அகவையில் நினைவு கூர்ந்த இளையராஜா

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்று இருந்தார் கருணாநிதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக வயது மூப்பின் காரணமாக அவர் உயிரிழந்தார்.

தற்போது திமுக தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள நிலையில் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இளையராஜாவின் பிறந்தநாளான நேற்று கோவையில் இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதி குறித்து நினைவு கூர்ந்த  இளையராஜா “எனக்கு கலைஞர் தந்தை சமமானவர். 

எனக்கு  இசைஞானி என்ற பட்டத்தை வழங்கியவர்.  அவர் வழியிலேயே முதல்வரும்  நாட்டை வழிநடத்தி செல்வதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என பேசியுள்ளார்.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement