• Jul 26 2025

பிரபல இயக்குநர் குறித்த சர்ச்சையான பேச்சு: சூப்பர் ஸ்டார் வருத்தம்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஜூட் ஆண்டனியை உருவக்கேலி செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் மம்மூட்டி.

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்மூட்டி.இவர்  தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து வரும் இவரின் நடிப்பில் இந்த வருடம் பீஷ்ம பர்வம், சிபிஐ 5, புழு, ரோஸாக் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது 'கிறிஸ்டோபர்', 'காதல்' உள்ளிட்ட களிலும் நடித்து வருகிறார் மம்மூட்டி.

 ‘2018’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ஜூட் ஆண்டனி குறித்து மம்மூட்டி பேசியுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘ஓம் சாந்தி ஓசானா’ படத்தை இயக்கியபவர் ஜூட் ஆண்டனி, ‘ஒரு முத்தாஸி கதா’, ‘சாராஸ்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படங்களைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் ‘2018’ படம் உருவாகியுள்ளது.

அத்தோடு கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 483 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘2018’ படத்தை இயக்கியுள்ளார் ஜுட் ஆண்டனி. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சகோ போபன், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், நரேன், லால், இந்திரன்ஸ், அஜு வர்கீஸ், தன்வி ராம், ஷிவதா, கௌதமி நாயர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் நடந்த இந்தப் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் மம்முட்டி, “இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் தலையில் முடி இல்லாவிட்டாலும், அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டீசரைப் பார்த்தேன். சிறப்பாக வந்துள்ளது” என தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



திரையுலகிலுள்ள ஒரு மூத்த இப்படியெல்லாம் பேசலாமா? என பலரும் விமர்சனம் செய்தனர்.மேலும்  இந்த விமர்சனங்கள் குறித்து இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் தனது ஃபேஸ்புக் பதிவில், மம்முட்டியின் கருத்து குறித்து தனக்கு எந்தக் கவலையும் அளிக்கவில்லை. இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்குவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.



இவ்வாறுஇருக்கையில்  இது தொடர்பாக நடிகர் மம்மூட்டி தனது முகநூல் பக்கத்தில், “அன்பர்களே, '2018' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் 'ஜூட் ஆண்டனியை' பாராட்டி உற்சாகத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் சிலரை காயமடையச் செய்ததற்கு வருந்துகிறேன். அத்தோடு  இனி வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துகொள்வதில் கவனமாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். நினைவூட்டிய அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement