• Jul 25 2025

நான் கமிட்டெட்... ரெட் கலர் உடையில் அசத்தும் நடிகை பிரியா பவானி..!!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் சீரியல்கள் நடித்துக்கொண்டிருந்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வர தொடங்கிய பின், சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

இவர் தற்போது இந்தியன் 2, பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில், அவ்வப்போது அட்டகாசமாக உடை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

அந்த வகையில், காதலர் தினம் என்பதால், இவர் கமிட்டெட் என்பதை நிரூபிக்கும் வகையில், சிவப்பு உடையில் சிக்கென்று போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 இவர் காதிலிப்பதை அண்மையில் தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “18 வயதில் ஆசைபட்டு, தற்போது நமது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம்” என குறிப்பிட்டிருந்தார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement