• Jul 25 2025

நான் உயிருடன் நன்றாக இருக்கிறேன்- நடிகர் சுதாகர் கதறல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் சுதாகர். 80களில் சுருள் சுருள் முடி, வசீகரமான முகம் என தமிழக மக்களின் மனதை கவர்ந்து வந்தவர்.

கிழக்கே போகும் ரயில், கல்லுக்குள் ஈரம், சுவரில்லாத சித்திரங்கள், நிறத் மாறாத பூக்கள், மாந்தோப்பு கிளியே, எங்க ஊரு ராசாத்தி, பொண்ணு ஊருக்கு புதுசு என பல படங்களில் நடித்தார்.


இளையராஜா அவர் நடித்த பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து அவருக்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்கி தந்தார் என்றே கூறலாம்.

நடிகர் சுதாகரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக  சோசியல் மீடியாவில்  திடீரென ஒரு வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அத்தோடு உடனே சுதாகர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அத்தோடு அதில், அனைவருக்கும் வணக்கம், என்னைப் பற்றி நீங்கள் அனைவரும் படிக்கும் தகவல் தவறானது. நான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். தயவு செய்து பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம்.

எதையும் உண்மை தெரியாமல் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம்.. நான் உயிருடன் இருக்கிறேன். நன்றாக இருக்கிறேன். கவலைப்பட எதுவும் இல்லை என்று சுதாகர் கேட்டுக் கொண்டுள்ளார். 




Advertisement

Advertisement