• Jul 26 2025

இமான் அண்ணாச்சியின் சகோதரர் போலீசில் பரபரப்பு புகார்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் இமான் அண்ணாச்சி சின்னத்திரை மட்டுமின்றி பல படங்களிலும் காமெடியனாக நடித்து  அசத்தி வருகிறார். அத்தோடு  அவரது காமெடிக்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.

மேலும்  அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் இமான் அண்ணாச்சியின் சகோதரர் செல்வகுமார் தற்போது சைபர் க்ரைம் போலீசில் கொடுத்திருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அத்தோடு  அவரது செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது என்றும், 10 ஆயிரம் பணம் வரும் என நம்பி அதில் வந்த லிங்க் க்ளிக் செய்ததால் தனது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேலாக பணம் திருடப்பட்டுவிட்டது என அவர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

மேலும்  இது பற்றி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகின்றது. 



Advertisement

Advertisement