• Jul 24 2025

அவசரப்பட்ட வடிவேலு... திடீரென 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' தேதியை மாற்றிய படக்குழு...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராகக் கலக்கி வருபவர் வடிவேலு. காமெடி நடிகனாக வலம் வந்த இவர் 2006-ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிய இந்தப் படத்தை ஷங்கர் தயரித்திருந்தார். இந்தப் படம் ஆனது கொடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட்டால், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டினார் வடிவேலு.


இதனால், பல வருடங்களாக படங்கள் இல்லாமல் வாய்ப்புக் குறைந்து வீட்டில் இருந்த வடிவேலுவின் இப்போது எல்லா பிரச்சினைகளும் முடிந்து 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். சுராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் உடைய ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கின்றது.


அந்தவகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் ராகவா லாரன்ஸுடன் 'சந்திரமுகி 2', உதயநிதியுடன் 'மாமன்னன்' ஆகிய படங்களிலும் வடிவேலு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். மற்றப் படத்தைப் போலவே சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. 


இதன் காரணமாக அந்தப் படங்களின் அப்டேட் வெளியாகும் முன்னரே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை ரிலீஸ் செய்ய நம்ம வைகைப்புயல் வடிவேலு ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளதாலேயே தான் வடிவேலுக்கு இந்த அவசரம் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுகின்றன.

Advertisement

Advertisement