• Jul 23 2025

உண்மையிலும் த்ரிஷா ஏ.எல்.சூர்யாவின் மனைவியா..? திருமணம் எப்போ..? நடிகையின் அம்மா வெளியிட்ட தகவல் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

40வயதைக் கடந்து விட்ட நிலையிலும் த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாது தனது சினிமா கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றார். இந்நிலையில் ஏ.ஏல். சூர்யா என்பவர் சமீபகாலமாக த்ரிஷா பற்றி எதையாவது தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்.


அதாவது "நானும், த்ரிஷாவும் காதலிக்கிறோம். வரும் நவம்பர் மாதம் எங்களுக்கு திருமணம். நாங்கள் அடிக்கடி போனில் பேசுவோம். தற்போது எங்களுக்கு இடையே சண்டை. அதனால் சரியான பேச்சுவார்த்தை இல்லை. என் மனைவியாகப் போகும் த்ரிஷாவை லியோ படத்தில் இருந்து நீக்க வேண்டும்" எனக்கூறி நாளுக்கு நாள் பல கருத்துக்களை வெளியிட்ட வண்ணமே இருக்கின்றார். 


இதனையடுத்து "இந்த ஆளு, எப்ப பார்த்தாலும் த்ரிஷா என் பொண்டாட்டினு சொல்லிக்கிட்டு இருக்காரு" என த்ரிஷா ரசிகர்களும் எரிச்சல் அடையத் தொடங்கி விட்டார்கள். ஆனால் சூர்யா சொன்ன எதையும் த்ரிஷா கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படப்பிடிப்புக்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.


இந்நிலையில் த்ரிஷாவின் அம்மா உமா இது பற்றி தற்போது பேசியிருக்கிறார். அதாவது "அந்த நபர் சொல்வதை எல்லாம் கண்டுகொள்ளவே கூடாது. மக்களுக்கு உண்மை தெரியும். அப்படி இருக்கும்போது இதில் தலையிட்டால் விஷயம் பரபரப்பாகிவிடும்" என கூறியிருக்கிறார். 

உமா சொன்னதை கேட்ட ரசிகர்களோ, அம்மா சொல்வது தான் சரி, ஒரே வார்த்தையில் சோலியை முடிச்சுட்டார் எனப் புகழ்ந்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement