• Jul 26 2025

லாஸ்ட் மினிற்றில் மனைவிக்கு அப்படி நடந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை...நவீன் ஜோடி பகிர்ந்த விடயம்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் தம்முடைய நகைச்சுவை மற்றும் மிமிக்ரி திறமையால் திரையுலகில் சிறந்த பின்னணி குரல் கலைஞராக வலம் வருகிறார். அண்மைக் காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் தொடரில் நாயகனாக நடித்த நவீன், பல்வேறு நடிகர்களின் குரலை அப்படியே தத்ரூபமாக பேசக்கூடிய வல்லமை வாய்ந்தவர்.  இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு குழந்தைக்கு அப்பாவாகி இருந்த வியடத்தை அவரே பகிர்நதிருந்தார்.

முன்னதாக சிங்கப்பூரில் நிகழ்ச்சியொன்றில் மாதவன் வாய்ஸ் பேச சொல்லி நவீனை ஒரு ரசிகையாக கிருஷ்ணகுமாரி கோரிக்கை விடுக்க, அப்போது மாதவன் குரலில் அலைபாயுதே வசனத்தை கிருஷ்ணகுமாரி பெயரை வைத்து பேசி காண்பித்திருக்கிறார் நவீன். அப்போது நவீன் மனதில் எதுவும் இல்லை என்றாலும் கிருஷ்ணகுமாரி நவீனின் இந்த அன்புக்கு பாத்திரமாகி உள்ளார். இப்படித்தான் இவர்களின் காதல் கதை ஆரம்பமாகி உள்ளது.


இவ்வாறுஇருக்கையில், தங்களின் குழந்தை பிறப்பு மற்றும் மனைவியுடனான காதல் என பல்வேறு விஷயங்களை இவரும் இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரியும் இணைந்து  தளத்துக்கு பிரத்தியேகமாக பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.

இதில் பேசிய நவீன், “என்னை விரும்புகிறாள் என்கிற ஒரே காரணத்துக்காக கிருஷ்ணகுமாரி எல்லா பழியையும், தான் ஏற்றுக் கொண்டார். நான் இன்றும் அவரை ஆச்சரியமாக பார்ப்பேன். எப்படி எல்லாவற்றையும் இப்படி ஏற்றுக்கொண்டு என்னையும் இவ்வளவு அன்பாக பார்த்துக் கொண்டு இருக்க முடிகிறது என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது

அவருடைய பிரசவ நேரத்தில் திடீரென சிசேரியன் என்று கூறியதும் அவருடைய வலியை நான் கண்முன்னே பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தேன்” என்று உருக்கமாக அவர் கூறியிருந்தார் .‌


இது பற்றி பேசிய நவீனின் மனைவி கிருஷ்ணகுமாரி, “கடைசி நிமிடத்தில் எனக்கு சிசேரியன் என்று தெரிய வந்தது. அப்போது என்னுடைய வலியை இவர் பார்த்தபோது மிகவும் தங்கிக் கொள்ள முடியாமல் தவித்தார். இதன் பிறகு எனக்கு குழந்தை பிறந்தது, குழந்தையை அவர்தான் முதன்முதலில் பார்த்தார். நான் பார்க்கவில்லை. என்னிடம் வந்து குழந்தை பிறந்து விட்டதாக  கூறியபோது நான் இன்னும் பார்க்கவில்லையே என்றேன். மருத்துவமனை முழுவதும் குழந்தை பிறந்ததை கொண்டாடி தீர்த்தார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement