• Jul 23 2025

நிஜத்திலும் அஜித் நல்ல நடிகன்.. தாறுமாறாக விளாசித் தள்ளும் பிரபல தயாரிப்பாளர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக துணிவு படம் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.


அஜித்தைப் பொறுத்தவரையில் இவர் பொதுவாகவே சர்ச்சைகளில் சிக்குவது குறைவு தான். இந்நிலையில், அஜித் குறித்து 'வேட்டையாடு விளையாடு' படத்தினுடைய தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சர்ச்சை கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அந்தவகையில் அவர் கூறுகையில் "அஜித் மாபெரும் நடிகர், ஆனால் அவர் சினிமாவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார். அஜித் முதலில் மனிதனாக வாழ வேண்டும்" என்றார்.


அதுமட்டுமல்லாது "என்னிடம் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டார். அதை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது என்னிடம் ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் அஜித் என்னை ஏமாற்றிவிட்டார். ஆனால் இப்போது என்னிடம் அது குறித்த ஆதாரம் உள்ளது" என்றார்.

அதோடு "அஜித் ஒரு ஜென்டில்மென் என அவரே தனக்கு பெயர் வைத்துக்கொண்டு பத்திரிகைகாரர்களுக்கு காசு கொடுத்து அவரை பற்றி எழுத செய்கிறார். மேலும், மரியாதையை காசு கொடுத்து வாங்குகின்ற ஒருவர் தான் அஜித்" எனவும் கூறி விளாசித் தள்ளியுள்ளார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

Advertisement

Advertisement