• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டில் மூண்ட அடிதடி சண்டை... முகத்தில் குத்தித் தாக்கி பலத்த காயம்... பதற்றத்தில் சக போட்டியாளர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது 'பிக்பாஸ்' தான். இது பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்தவகையில் நடிகர் சல்கான்கான் வருடாவருடம் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை வட இந்தியாவில் நிறைய பேர் பார்க்கிறார்கள். 


அதுமட்டுமல்லாது இந்த நிகழ்ச்சியானது ஒவ்வொரு வருடமும் பல சர்ச்சைகளில் சிக்கியும் வருகிறது. அதிலும் குறிப்பாக 10 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய டைரக்டர் சஜித்கானை பிக்பாசில் போட்டியாளராக சேர்த்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவை விட்டே விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். அத்தோடு சஜித்கானை பிக்பாசில் இருந்து நீக்கும்படி கூறி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதமும் எழுதி இருந்தார். 


இந்தநிலையில் இந்தி பிக்பாஸ் வீட்டில் தற்போது பலத்த அடிதடி சண்டை நடந்துள்ளது. அதாவது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நடிகை அர்ச்சனா கவுதமுக்கும், இன்னொரு போட்டியாளரான ஷிவ் தாக்கரே என்பவருக்கும் சாராமாரியாக வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக பெரியளவில் மாறியது. 

அந்தவகையில் ஷிவ் தாக்கரேயை அர்ச்சனா கவுதம் முகத்தில் தன்னுடைய கைகளால் குத்தி கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உடல்நிலையும் குன்றியது. இதையடுத்து அர்ச்சனா கவுதமை பிக்பாஸ் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றினர். இது பிக்பாஸ் வீட்டில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement