• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத ஷிவின்... கடைசியில் கதிரவனுக்கு கை கூடக் கொடுக்கலயே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது அக்டோபர் மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அத்தோடு கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் எவிக்டாகி வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் உள்ளே வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக வெளியே இருந்து உள்ளே வந்தவர்கள் வெளியில் என்ன நடக்கிறது என்று சொல்லக்கூடாது என்று பிக்பாஸ் ஆர்டர் போட்டுள்ளார்.


அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்றைய தினம் ரச்சிதா மற்றும் ஆயிஷா வந்திருந்தார்கள். மேலும் ரச்சிதாவைப் பார்த்ததும் ஷிவின் கட்டியணைத்து கதறிக் கதறி அழுதார். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவரும் தான் இணைபிரியாத தோழியாக இருந்தனர். இதனால் ரச்சிதா வெறியேறியதால், வருத்தத்தில் இருந்த ஷிவின் அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.


இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப் பட்டிருந்தது. அதில் பணத்தை எடுத்துச் செல்வது யார் என்று அனைவரும் காத்திருந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் கதிரவன் 3 லட்சம் ரூபாய் பணமூட்டையை எடுத்தார். பண மூட்டையை கதிரவன் அறுக்க முயற்சித்த போது அனைவரும் வேண்டாம் என பதறினார்கள். ஏனெனில் இன்னும் பணம் அதிகரிக்கும் காத்திரு என்றார்கள் ஆனால், யாருடைய பேச்சையும் கேட்காமல் கதிர் பணமூட்டையை உடனே எடுத்தார்.


இதனைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேற ரெடியான கதிர் "பணத்திற்காக இந்த முடிவை நான் எடுக்கவில்லை. இது தான் சரியான முடிவு என்று நினைக்கிறேன், வீட்டில் உள்ளவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள் இந்த நாட்களை நான் என்றும் மறக்க மாட்டேன்" என்றார். 

அந்த சமயத்தில் தூரத்தில் இருந்த ஷிவின்,கதிரைப்பார்த்து கதறி அழுது கொண்டே இருந்தார். இதையடுத்து, ஆயிஷாவிடம் சாரி கேட்ட கதிரவன் அவர் வந்ததிலிருந்து ஒருநாள் கூட பிக்பாஸ் வீட்டில் தங்க முடியாமல் போய்விட்டதாக கூறுகிறார். இருப்பினும் வெளியில் வந்து பேசு என்றார். 


அதன் பின்னர் அருகில் இருந்த ஷிவினிடம் பேசும் கதிர் அவரிடம் போட்டிக்காக வாழ்த்து சொல்ல, கதிருக்கு ஷிவின் கை கூடக்கொடுக்காமல் கையை கூப்பி கதிருக்கு வணக்கம் சொல்லி கதிரை வழியனுப்பினார். 

இதனைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேற ரெடியான கதிர் "பணத்திற்காக இந்த முடிவை நான் எடுக்கவில்லை. இது தான் சரியான முடிவு என்று நினைக்கிறேன், வீட்டில் உள்ளவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள் இந்த நாட்களை நான் என்றும் மறக்க மாட்டேன்" என்றா. இவ்வாறாக ஷிவின் கதிருக்காக கதறி அழுதது பார்வையாளர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement