• Jul 24 2025

விஜய் எந்த தியேட்டரில் படம் பார்க்க போவாரு- ரகசியமாக பதில் சொன்ன ராஷ்மிகா- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தின் முதல் ஷோவானது இன்று அதிகாலை 4மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.இந்த நிலையில் வாரிசு நடிகை ராஷ்மிகா பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் வாரிசு திரைப்படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.


அதே போல வாரிசு படத்தின் FDFS பார்க்க ஒரு திரையரங்கில் நடிகர் விஜய் போக உள்ளதாகவும் அந்த சீக்ரெட் ராஷ்மிகாவுக்கு தெரியும் என்பது பற்றிய கேள்வியையும் நெறியாளர் முன்வைக்க, "எனக்கு தெரியாது, அதுவும் டாப் சீக்ரெட் தான்" என ராஷ்மிகா தெரிந்தும் தெரியாதது போல பதில் கூறினார்.

 இதனால், விஜய் ஒரு திரை அரங்கில் நிச்சயம் FDFS பார்க்க செல்வார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் வெவ்வேறு கெட்டப்புகள் போட்டு தனது திரைப்படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க செல்வது பற்றியும் அது குறித்து விஜய்யிடம் கேட்டுள்ளீர்களா என்றும் ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பப்பட, இதற்கு பதில் சொல்லும் அவர், "கேட்டேன். 


கண்டிப்பா விஜய் சார் அப்படி பண்ணி இருப்பாரு. எல்லா நடிகர்களுக்கும் இந்த மாதிரி பண்றது பிடிக்கும். நானும் ஃபர்ஸ்ட் ஷோ போவேன். ஆனா யார்கிட்டயும் எந்த தியேட்டர் போறேன்னு சொல்ல மாட்டேன். மாஸ்க், தொப்பி எல்லாம் போட்டுட்டு என் படத்துக்கு நானே சத்தம் போட்டுட்டு இருப்பேன்" என கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement