• Jul 24 2025

பணத்திற்காக ஹீரோவின் புகைப்படத்திற்குப் பதிலாக காமெடியனின் புகைப்படத்தை வைத்த படக்குழுவினர்…கடுப்பாகிய யோகிபாபு

Prema / 3 years ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் நகைச்சுவையை பார்த்தாலோ, கேட்டாலோ தான் சிரிப்பு வரும். ஆனால் ஒரு நகைச்சுவை நடிகரின் பெயரை சொன்னதும் சிரிப்பு வருகின்றதென்றால் அது வேறு யாரும் இல்லைங்க நம்ம யோகிபாபு தான்.

அதாவது ஒரு காலத்தில் முன்னணி நகைச்சுவை நாயகர்களாக வலம் வந்த வடிவேலு, சந்தானம், சூரி போன்ற நடிகர்கள் தற்போது கதாநாயகர்களாக மாறி நடித்து வருவதால் நகைச்சுவை கதாபாத்திரங்கள் சமீபகாலமாகவே வெற்றிடமாக இருந்து வந்தது. இவ்வெற்றிடத்தை எல்லாம் நிரப்பும் வகையில் யோகி பாபுவின் நகைச்சுவைகள் அமைந்திருந்தன.

நடிகர் விஜய் சேதுபதியை போன்றே யோகி பாபுவும் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் வெற்றிக் கொடி கட்டி வரும் நடிகர் யோகிபாபு தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்து ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர தற்போது 'தாதா' என்ற படத்திலும் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ஹீரோவாக நிதின் சத்யா நடித்துள்ளார். இதில் யோகிபாபுவின் கதாபாத்திரம் நகைச்சுவைக்கு நிறைந்ததாக அமைந்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தினுடைய போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. அப்போஸ்டரில் நடிகர் நிதின் சத்யாவின் புகைப்படத்தை வைக்காமல் யோகிபாபுவின் புகைப்படத்தை வைத்திருக்கின்றனர் படக்குழுவினர். இதற்கு காரணம் யோகிபாபுவிற்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் அதிகமாகியுள்ளமையே ஆகும்.

இதையறிந்த யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அதில் "இந்தப்படத்தில் நான் நான்கு காடசிகளில் மட்டும் தான் நடித்திருக்கேன், நண்பர் நிதின் சத்யா தான் ஹீரோவாக நடித்திருக்கின்றார், தயவு செய்து இது போன்று விளம்பரம் செய்யாதீர்கள்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். தற்போது யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள இப்பதிவு வைரலாகி வருகிறது.

யோகிபாபுவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் நிதின் சத்யாவின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து யோகிபாபு இவ்வாறு பதிவிட்டு இருப்பது அவரின் நற்பண்பை எடுத்துக் காட்டுவதாகவும் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement