• Jul 25 2025

என்னது நடிகர் சிரஞ்சீவிக்கு புற்றுநோயா? அவரே கூறிய அதிர்ச்சித் தகவல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிரஞ்சீவி தெலுங்குப்பட உலகின் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களை கொண்டவராக திகழ்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வால்டர் வீரய்யா படம் இவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. படத்தில் அவருக்கு ஸ்ருதிஹாசன் ஜோடியாகியிருந்தார்.

தன்னுடைய அரசியல் பிரவேசம் காரணமாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்த சிரஞ்சீவி, தற்போது இந்தப் படத்தின்மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சிரஞ்சீவிக்கு கேன்சர் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று தற்போது குணமாகியுள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து சிரஞ்சீவியை நலம் விசாரித்து வருகிறார்களாம். இதனால் தற்போது இந்த விஷயத்தில் விளக்கம் அளித்துள்ளார் சிரஞ்சீவி.

 தனக்கு கேன்சர் இல்லை என்றும் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு இந்த செய்தி பரப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.தான் ஒரு கேன்சர் சென்டர் திறப்பு விழாவில் பங்கேற்று, நிகழ்ச்சியில் பேசியபோது, ரெகுலராக கேன்சருக்கான டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், கேன்சரை தவிர்க்கலாம் என்றும் பேசியதாகவும் அதேபோல தான் கோலன் ஸ்கோப் டெஸ்ட் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ள அவர், அப்போது தனக்கு நான் கேன்சரஸ் பாலிப்ஸ் இருந்தது கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

தான் உரிய நேரத்தில் டெஸ்ட் செய்ததால் தனக்கு கேன்சர் வருவது தவிர்க்கப்பட்டதாகவும் அந்த நிகழ்ச்சியில் தான் பேசியதாக சிரஞ்சீவி தெரிவித்திருந்தார். தன்னுடைய இந்த பேச்சுதான் தற்போது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு தனக்கு கேன்சர் என்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.



Advertisement

Advertisement